இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 தமிழக மீனவர்கள் தயாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் திகதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
3 படகுகளிலிருந்த 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஓகஸ்ட் 6 ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றம் 22 மீனவர்களில், 19 மீனவர்களை விடுதலை செய்தது
,3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு அபராதமும், தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 17 மீனவர்கள் நேற்று மாலை விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்
punidha