லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத கிடங்கை குறித்து தாம் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் ஆயுதக் களஞ்சிய சாலையை ஒரே இரவில் தமது விமானப்படை தாக்கி அளித்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவதாகவும் அத்திகோடு சிரியாவை சேர்ந்த ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீதான தாக்குதல், காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த போர் நடவடிக்கையை அடுத்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
VITHUSHAN