அவுஸ்திரேலியாவின் முன்னாள் துணை உயர்ஸ்தானிகர் 5 இலட்சத்து 43 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலரை அவரது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வழங்குமாறு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் கென்பராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2018 வரை வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்ததற்காக சம்பள நிலுவையை வழங்கவில்லை.
இலங்கையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட பிரியங்க தனரத்னவுக்கு நிலுவை சம்பளத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரியங்கா தனரத்ன, முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகரின் வீட்டில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் அவருக்கு இரண்டு நாட்களே விடுமுறை கிடைத்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படாதது மற்றும் அடிமையாக வேலை வாங்கியமை தொடர்பாக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி ஆணையாளர் 11 ஆயிரத்து 212 அவுஸ்திரேலிய டொலர் மாத்திரமே மூன்று வருட சேவைக்காக வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறையாக சம்பளம் வழங்கப்படாத இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டை முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் பெற்று கொண்டு மீள வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி உரிய சம்பளத்தை வழங்காமல், வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விடுமுறை வழங்கவில்லை எனவும் சட்டத்தரணிகள் விசாரணையின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
புனிதா