மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமைதியின்மை உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் இஸ்ரேலை குறிவைத்து எதிர்பாராத தாக்குதல் நடக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பல ஷெல் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை அனைத்தையும் இஸ்ரேல் படைகள் வெற்றிகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், ஹூதி அமைப்புக்கு சொந்தமான இரண்டு கடற்படைக் கப்பல்கள், செங்கடலில் அமெரிக்கப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர காலங்களில், வீடுகள் மற்றும் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களை பயன்படுத்தவும், தேவையான அனைத்து உணவு மற்றும் குடிநீரையும், தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜிபிஎஸ் மற்றும் தொலைபேசி இணைப்புகள் அவ்வப்போது தடைபடலாம், எனவே இணைப்புகளை மீட்டெடுக்கும் வரை பொறுமையாக இருகுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இஸ்ரேல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை தயார் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் தயாராகி வருவதாகவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்
நெருக்கடி நிலை குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும், ஏதேனும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டால், தூதரகத்திற்கு உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.