நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 179 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
படவிளக்கம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்து 438 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 357 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மேல் மாகாணத்தில் 445 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 649 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 357 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 256 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
அதேநேரம், சீரற்ற காலநிலையால் 179 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
புனிதா