35 நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்குள் விசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு, இந்த நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.