புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள் மூவரும் உயர்ஸ்தானிகர் இருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் , இரண்டு உயர்ஸ்தானிகர்கள் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
டயானா மெக்கிவிசீன் லிதுவேனியா குடியரசுஸின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
டிரின் தி டாம் வியட்நாம் சோசலிசக் குடியரஸின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
மாலர் தன் டைக் மியான்மார் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
பெர்சி பெட்சன் சந்தா சிம்பாப்வே உயர்ஸ்தானிகராகவும் , அண்டலிப் எலியாஸ் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
punidha