தேர்தல் சட்டமீறல் தொடர்பாக நேற்று மாலை வரை தமக்கு 771 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரை மொத்தமாக 771முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேசிய தேர்தல்முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 388 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 383 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 23 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 31 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டமீறல் தொடர்பாக 747 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும்,23 வேறு விடயங்களுக்கான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புனிதா