திடீர் சுகவீனம் காரணமாக காலமான ஜனாதிபதி சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் இலியாஸ்க்கு பதிலாக மற்றுமொரு வேட்பாளரை நியமிக்க வாய்ப்புள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மொஹமட் இலியாஸின் இறப்புச் சான்றிதழை ஆணைக்குழுவில் சமர்ப்பித்து புதிய வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளர் நியமனம் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் எனவும் முஹம்மட் இல்யாஸின் பெயரும் சின்னமும் ஏற்கனவே அச்சிடப்பட்டிருப்பதால், வாக்குச்சீட்டுகளில் தொடர்ந்தும் இருக்கும் என ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் இலியாஸ் திடீர் சுகவீனம் காரணமாக கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இலியாஸ், தனது 79 ஆவது வயதில் காலமானார்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது.