ஜேர்மனியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவ குறித்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜேர்மனியின் அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நெதர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் இந்த திருவிழா நடைபெற்றுள்ளது.
நகரம் நிறுவப்பட்டு 630 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நடைபெற்ற திருவிழாவில் இந்தத் தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது அந்த நபர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது..
அப்பகுதியை முழுமையாக முடக்கி மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.