ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன
இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிடைக்க பெற்ற முறைப்பாடுகளில் 877 முறைப்பாடுகல் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்பானவை எனவும், வன்முறைச் செயல்களுடன் தொடர்பான முறைப்பாடுகள் ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.