சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடிவந்த அவர், இன்று தனது சமூக வலைதளத்தின் ஊடக இந்த முடிவை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடினார்.
டெஸ்ட் போட்டிகள் 2 ஆயிரத்து 315 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 793 ஓட்டங்களையும் டி20 போட்டிகளில் ஆயிரத்து 579 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
38 வயதான ஷிகர் தவான், பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டோகிராமில் நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே இந்தியாவுக்காக விளையாடினார்.
இதேநேரம் 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட அவர் விளையாடவில்லை ஏற்பதும் குறிப்பிடத்தக்கது.
punidha