அரச மற்றுத் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 16ஆம் திகதி நிறைவடைந்தது.
ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும், 26ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகிறது.
இதனிடையே, மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய நோய் நிலைமைகளில் இருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்தியர்கள் பெற்றோரிடம் கேட்டு கொண்டுள்ளனர்.
punidha