ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மதுசாரம் ,போதைப்பொருள் தகவல் மையம் 12 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது
போதைப்பொருள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய பொருளாதார, சுகாதாரம், சமூக சவால்களை எதிர்கொள்ள வலுவான கொள்கைகள் ,நடவடிக்கைகளின் அவசியத்தை இந்தப் பரிந்துரைகள் வலியுறுத்துகின்றன.
இலங்கையில் மதுபானம் , போதைப்பொருள் பாவனையானது அகால மரணங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதாக அந்த மையம் கூறுகிறது
புகைபிடித்தல் ,மதுபானம் அருந்துதல் மூலம் நாளாந்தம் கிட்டத்தட்ட 100 மரணங்கள் நிகழ்வதாக மதுசாரம் ,போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது
இலங்கையில் தனிநபர்கள் மதுபானம் மற்றும் புகைப்பழக்கத்திற்காக நாளாந்தம் சுமார் 121 கோடி ரூபாயை செலவழித்து பெரும் பொருளாதார சுமையை உருவாக்குகின்றனர்.
எனவே இவற்றை கருத்திற் கொண்டு மதுசாரம் ,போதைப்பொருள் தகவல் மையம் 12 முக்கிய பரிந்துரைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முன்வைத்துள்ளது
இந்த விடயங்கள் தொடர்பில் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் சில தீர்வுகளை உள்ளடக்க வேண்டும் என மதுசாரம் ,போதைப்பொருள் தகவல் மையம் கேட்டுக்கொண்டுள்ளது
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், ஆண்டுதோறும் மதுபானம் , சிகரெட் மீதான வரிகளை அதிகரிக்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது
மதுபானம், புகையிலை ஊக்குவித்தல் மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்க ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது
பாடசாலைகள்,மத நிறுவனங்களுக்கு அருகில் மதுபானசாலைகள் இயங்குதல் , சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்துதல் என்பனவற்றையும் குறிப்பிட்டுள்ளது
தற்காலிக மதுபான உரிமங்களை வழங்குவதை நிறுத்தவும் , சுற்றுலாத்துறைக்கு கீழ் வழங்கப்படும் மதுபான உரிமங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டக்கொண்டுள்ளது .
மேலும் 2016ல் அங்கீகரிக்கப்பட்ட மதுக் கட்டுப்பாடு குறித்த தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் அந்த மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயங்கள் தவிர மேலும் முக்கிய 7 விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேட்பாளர்கள் உள்ளடக்க வேண்டும் என மதுசாரம் ,போதைப்பொருள் தகவல் மையம் கேட்டுக்கொண்டுள்ளது