கடந்த 26ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற, நான்கு ராமேஷ்வர மீனவர்களின் பயணித்த விசைப்படகு சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய நால்வரில் நீந்தி கரைக்கு வந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் விமானம் மூலம் தாயகம் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை நடுக்கடலில் மாயமான மீனவர் எமரிட் என்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த படகு விபத்தில் காணாமல் போன மற்றுமொரு மீனவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.