இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னறிவிப்பில்லாத வகையில் இடம்பெறும் இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு மாநாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.