எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேரலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளன.
நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களும் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களும் வாக்களித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புனிதா