2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
5 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்குகொள்ளலாம்.
இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளவும். /www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.