கிரென்ஃபெல் டவா் தீ விபத்து மரணங்களுக்கு அரசின் தவறும் காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரென்ஃபெல் டவா் தீ விபத்து உயிரிழப்புகள் தொடா்பாக பிரிட்டன் அரசின் சாா்பில் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற கோர விபத்து ஏற்பட்டிருக்கக்கூடாது எனவும், இனியும் ஏற்படக்கூடாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதால சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனவும் பிரதமர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டன் அரசு, ஒழுங்காற்று அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை பல ஆண்டுகளாக செய்த தவறுகள் காரணமாகவே லண்டனில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட அடுக்குமாடி தீ விபத்தில் 72 போ் உயிரிழந்ததாக இது தொடா்பான விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீவிபத்துக்கு ஏதோ ஒரு காரணம் மட்டும் இருப்பதாகக் கூறமுடியாது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிறுவனங்கள் மேற்கொண்ட நோ்மையற்ற நடவடிக்கைகள், பலவீனமான அல்லது தகுதியற்ற ஒழுங்காற்று அமைப்புகள், அரசு காட்டிய அலட்சியம் ஆகியவற்றின் கூட்டு விளைவே அந்த மோசமான தீ விபத்து ஆகும்.
தீ விபத்தில் 72 பேரின் உயிரிழப்பு எளிதில் தவிா்த்திருக்கக்கூடிது இருந்தாலும், அவா்களை பாதுகாக்க பல்வேறு நபா்களும் அமைப்புகளும் தவறியதால் உயிரிழப்புகள் நேர்ந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.