பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளின் அடிப்படையில் 753 முறைப்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக நேற்று மாலை வரை தமக்கு இரண்டாயிரத்து 460 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரை மொத்தமாக இரண்டாயிரத்து 460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு ஆயிரத்து 530 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 84 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 149 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்ட மீறல் தொடர்பாக இரண்டாயிரத்து 387 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும், 62 வேறு விடயங்களுக்கான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு கிடைக்க பெற்ற முறைப்பாடுகளில் ஆயிரத்து 707 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புனிதா