காலி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
அந்த பிரதேச சபை தேர்தலக்கு தமது கட்சி வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது சயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு கையளிப்பது தொடர்பான அறிவித்தல் கடந்த 26 ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்டதாக எல்பிட்டிய பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலக்காக தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை விண்ணப்பிக்க முடியும்.
அந்த காலவரையறை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத்திரம் பூரணப்படுத்தலுக்காக 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெற்று கொள்ள முடியும்.
தேவையான தகவல்களை பெற்று கொள்வதற்காக 2024 எல்பிட்டிய பிரதேச சபையின் வாக்காளர் பட்டியல் காலி மாவட்ட தேர்தல் அலுவலகம், எல்பிட்டிய பிரதேச செயலகம், எல்பிட்டிய பிரதேச சபை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் அந்தந்த கிராம சேவை பிரிவுகளுக்கு சொந்தமான வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
புனிதா