ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த ஏனைய அரசியல்வாதிகள் கொள்கை, திட்டம், எதிர்கால நோக்கம் பற்றிய சிந்தனையின்றி விமர்சன அரசியலையே செய்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது ஆண்டு விழா இன்று காலை புறக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன, கட்சியின் முன்னாள் செயலாளரும், டி.எஸ்.சேனாநாயக்கவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2022 ஆம் ஆண்டு நாடு வீழ்ந்து போனது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டுக்கு செய்த பங்களிப்பு, அபிவிருத்தி, கருத்து மிகவும் விசேடமானது எனவும்,
எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கென்று ஒரு கருப்பொருள் காணப்பட்டதாகவும் அகிலவிராஜ் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மாத்திரமே புதிதாக எதிர்காலத்தை தொடர்பில் சிந்திப்பவர் என கட்சியின் பிரதி தலைவர் குறிப்பிட்டார்.
ஏனையவர் அனைவரும் பாரம்பரிய அரசியல்வாதிகள் எனவும், கொள்கை, திட்டம், எதிர்கால நோக்கம் எதுவுமின்றி விமர்சன அரசியலையே செய்து வருவதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தினார்.
punidha