ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக பிரதி தபால் மாஅதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவளை, தபால்மூல வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
punidha