இலங்கையின் கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டை மீள்பரிசீலனை செய்வது நாடு பாதாளத்திற்கு செல்வதற்கு காரணமாக அமைந்துவிடும் என நிதி அமைச்சு எச்சரித்துள்ளது
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இழக்க நேரிடும் என நிதி அமைச்சு எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளுக்கு உந்தப்படவில்லை என்றால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது நிதி அமைச்சு கூறியுள்ளது.
அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் ஒப்பந்தத்தை பல மாதங்களுக்கு தாமதப்படுத்தும் என்றும் நிதி அமைச்சு எச்சரித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாக கூறியிருந்தது.
கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் அவசியம் என்றும் நிதியமைச்சக அறிக்கையில் தெரிவித்துள்ளது.