பழங்குடியினருக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆதிவாசி மக்கள் காடுகளுக்குள் நுழைவதை எளிதாக்குவதும், வன வளங்களை தடையின்றி பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்குவதும் ஆகும்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக தம்பனை மற்றும் ரதுகல பழங்குடியினர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழங்குடியின சமூகத் தலைவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனிதா