வாக்களிப்பு மத்திய நிலையங்களில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர் அல்லது குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு குழப்பம் விளைவிக்கும் தரப்பினரை கைது செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் அனுமதியற்ற துப்பாக்கி, பாதாள உலக கோஷ்டியினரை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக விசேட அதிரடி படை குழுவினர் இதற்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இரண்டு இலட்சம் அனுமதியற்ற துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் சந்தேகம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புனிதா