தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அங்கு உழைக்கும் தகுதியுடைய இளைஞா்களின் விகிதமும் சரிந்துவருகிறது.
இதன் விளைவாக, மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ‘ஒரு தம்பதியருக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கை கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் நாட்டுக் குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீன அரசு தடை விதித்துள்ளது.
punidha