ஜோர்தானுக்கும் காஸாவின் மேற்குவங்கி கரைக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூன்று இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் பகுதியில் இருந்து டிரக்கில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஜோர்தானுக்கும் மேற்கு வங்கி கரைக்கும் இடையிலான எல்லை நுழைவு ஜோர்தான் பக்கத்தில் மூடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டதாக ஜோர்தான் தெரிவித்துள்ளது.
punidha