குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று காரணமாக இந்தியாவில் தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது.
குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது