நைஜீரியாவில் நடுவீதியில் ட்ரக் மற்றும் எரிபொருள் தாங்கி விபத்தில் 50 பேர் மரணம்
தீயில் கருகிய நிலையில் 18 சடலங்கள் மீட்பு.
நைஜீரியாவில் பொது மக்களோடு பயணம் செய்த ட்ரக் வண்டி ஒன்று எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதியதில் சுமார் 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இரண்டு வாகனங்களும் நடு வீதியில் மோதிக் கொண்ட போது பாரிய ஓசையுடன் தீயும் பரவியுள்ளது.
இதனால் பலர் தீயில் கருகி மரணம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வட மத்திய நைகர் மாநிலத்தில் அகாயி பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் இருந்து 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவற்றுள் 18 சடலங்கள் தீயில் கருகிய நிலையில் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் இன்னும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் பயணம் செய்த ட்ரக் வண்டியில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அதனால் சரியான மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ட்ரக் வண்டியில் கால்நடைகள் சில இருந்ததாகவும் தெரியவந்துள்ளது
punidha