ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறை தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேர்தலுக்கான பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் விரைவில் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
punidha