சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் மத்திய பகுதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் மத்திய பகுதி நகரமான மஸ்யாப் நகரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்த நகரின் சில இடங்களில் தீ பரவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் வான் பரப்பின் ஊடாக இஸ்ரேல் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஸ்யாப் நகரில் உள்ள சில இராணுவ நிலைகளை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவை பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத சிரியா அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தகவல் வழங்கி உள்ளார்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பொது மக்களே என்று அந்த நகர ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 வருடங்களாக சிரியாவின் பல இலக்குகளை இஸ்ரேல் வான்வழியாக தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவற்றுள் பல சிரியாவில் செயற்படும் ஈரான் சார்பு நலன் பேணும் இடங்கள் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது.
புனிதா