16 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற விசேட குழு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது.
நாட்டில் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தடையின்றி ஊட்டச்சத்து வழங்குதல், ஆரோக்கியமான, குறைந்த விலை உணவுக்கான பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விலைகளை கட்டுப்படுத்தல், உள்ளிட்டவை தொடர்பிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்பள்ளி உணவு, பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம், தரமான உணவு வழிங்கலுக்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் அமுல்படுத்தலைக் கண்காணித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளும் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
punidha