நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாள்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்தது.
தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காங்கேசன்துறை நாகப்பட்டினத்திற்கிடையான சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும்.
பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
punidha