நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை ஆடவர் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை மாதம் இடைக்கால அடிப்படையில் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டார்.
சனத் ஜெயசூர்யவின் கீழ், இலங்கை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று புதிய சாதனையையும் படைத்தது.
இதேநேரம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இலங்கை இழந்தாலும், 3 ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது.
இந்நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை காலியில் நடைபெறவுள்ளது.