தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் நாளை நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், ஏனைய செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விடுதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பரீட்சை தொடர்பான கேள்விகள் அல்லது அதுபோன்ற கேள்விகள் வரலாம் என பரிந்துரைக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு யாரேனும் நடந்துகொண்டால் அவை தொடர்பாக அறிவிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
VITHUSHAN