2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது .
punidha