ஈ-விசா நடைமுறையை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை எதிர்வரும் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.