கலால் திணைக்களத்திற்கு 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசரி தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் கலால் திணைக்களம் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது.
கடந்த வருடம் இந்த காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 25 வீதம் வருமானம் வளர்ச்சியை காட்டுவதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசரி குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆணடு அந்த திணைக்களம் 17 ஆயிரத்து 900 கோடி வருமானத்தை பெற்று கொண்டுள்ளது.
இந்த வருடம் 23 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று கொள்ள இலக்காக கொண்டுள்ளதாக எம்.ஜே. குணசரி குறிப்பிட்டார்.