நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை 8.00 மணிக்கு மருத்துவ பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தொடர்பில் முறையான முறைப்பாடு எதுவுமின்றி ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க,
இந்த விசாரணைக்கு எதிராகவே பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி முதல் அனைத்து வைத்தியசாலைகளிலும் 7 நாட்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மீள்பரிசீலனைக்கு சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.
வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நியாயம் கிடைக்காவிட்டால் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.