இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்க பெறாதவர்கள் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டையுடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என ராஜித ரணசிங்க கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 97 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் தெரிவித்தார்.
கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது என ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
இதுவரை எந்தவொரு வாக்காளரும் தங்களின் வாக்காளர் அட்டையை பெறவில்லை என்றால், அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ராஜித ரணசிங்க கூறியுள்ளார்.
வாக்காளர் அட்டை பெற்று கொள்ளாதவர்கள் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பெற்று கொள்ள முடியும் என பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.