கடந்த 15 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மணவர்களின் பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது என பெற்றோர் சுட்டிக்காட்டியதுடன்,
அதன் காரணமாக தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி இந்த பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள பரீட்சை திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல பகுதிகளில் உள்ள பெற்றோர் பல வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர்.
திணைக்களத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கேகாலை பிரதேசத்தில் உள்ள வட்ஸ்அப் குரூப் ஒன்றில் பதிவு ஒன்று பரவிவருகிறது.