ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான நுமு-649 விமானத்தில் டுபாய் பயணமாகியுள்ளார்.
பெசில் ராஜபக்ஷ அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும் அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வார காலப்பகுதிக்கு மாத்திரமே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சை பெறுவதே இதன் நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், தேர்தல் தினத்தன்று வெளிநாடு செல்வது பசில் ராஜபக்ஷவின் வழக்கமாகும் எனவும் மேலும் குறிப்பிடப்படுகிறது.
punidha