இலங்கையின் 16வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
கல்வி, சமூக நீதி உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
24 வருடங்களின் பின்னர் இலங்கையின் பிரதமராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.