காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்ட அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களால் பயன்படுத்தப்பட்டவை. பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறினால், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறன்றி இவ்வாறு விமர்சன கருத்துக்களை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வமாக வாகனங்களை கையளித்ததன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதற்காக அவற்றை காட்சிப்படுத்துவது நியாயமற்றதென திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
punidha