CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

O / L  பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் இதோ!

O / L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் இதோ!

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்  வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட ஆய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  கூறுகின்றார்.

எனவே  ஆய்வு நடவடிக்கைகளை நிறைவு  செய்து இந்த மாதத்தின் எதிர்வரும் 28 ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளை  வௌியிட முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 18 அம் திகதி நிறைவடைந்த கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 56  ஆயிரத்து 641 பேர் தோற்றியிருந்தனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 461 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்