Ask Media  நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு  நீதிமன்றம் உத்தரவு.

Ask Media நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.

Ask Media தனியார் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். குகநாதனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படும் Ask Media நிறுவனத்தின் கேபிள் TV இணைப்புக்கான வயரில் இருந்து மின்சாரம் தாக்கி, தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக Ask Media நிறுவனத்தின் ஊழியர்கள் மூன்று பேரை, காவல்துறையினர் சந்தேகநபர்களாக பெயரிட்டிருந்தனர்.

எனினும், சட்டவிரோதமாக, மின்சார கம்பங்கள் ஊடாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டமையே உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம் எனவும், இதற்கான பொறுப்பை Ask Media நிறுவன உரிமையாளரான எஸ். குகநாதனே ஏற்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

எனினும், Ask Media நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். குகநாதன், தற்போது பிரான்ஸில் இருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

எனினும், Ask Media நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். குகநாதனை இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயரிட்டு, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதவான் இன்று உத்தரவிட்டார்.


">



LEAVE A COMMENT