ஶ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் - யார் இந்த பெண்?

ஶ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் - யார் இந்த பெண்?

நடுத்தர வயது பெண்ணொவர் இலங்கையின் கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக திகழ்வதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

தென் பகுதியைச் சேர்ந்த குறித்த நடுத்தர வயது பெண் இலங்கையின் கிரிக்கட் விளையாட்டுத் துறைக்கு எவராலும் விளைவிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வார இறுதி ஆங்கில நாளிதழொன்று செய்தி வௌியிட்டுள்ளது,

இந்தியாவிலுள்ள ஆட்ட நிர்ணய தரகர்களுடன் குறித்த பெண் தொடர்பு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளப்பட்டுள்ளது,

இலங்கையிலுள்ள தரகர் ஒருவருடன் இணைந்து குறித்த பெண் பல கிரிக்கட் வீரர்களை தவறான  செயற்பாடுகளுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு இலங்கையின் பல கிரிக்கட் வீரர்களுக்கும் பாலியல் தொடர்புகள் உள்ளதாகவும் குறித்த ஆங்கில நாளிதழ் வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது,

சர்வதேச கிரிக்கட்  பேரவையினாரல் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் இந்த விடயம்  பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சில கிரிக்கட் வீரர்கள், குறித்த பெண் மற்றும் இந்திய தரகர் இருக்கும் புகைப்படங்களும் இதன்போது சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது,

அத்துடன் ஶ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு புதிதாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.,

ஶ்ரீலங்கா கிரிக்கட்டில் உள்ள ஊழல்கள் தொடர்பில் குறித்த இருவரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன,


LEAVE A COMMENT