CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

 டொனால்ட் ட்ரம்புடன் மீண்டும் சந்திப்பு -வட கொரியா

டொனால்ட் ட்ரம்புடன் மீண்டும் சந்திப்பு -வட கொரியா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த தாம் தயாராகவுள்ளதாக வட கொரிய தலைவர் கிம் ஜோங் அன் தெரிவித்துள்ளார். 

அந்த நாட்டு ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்கா சரியான அணுகுமுறைகளை கையாண்டால் மாத்திரமே இந்த சந்திப்பு இடம்பெறும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் அன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியுமான நியாயமான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி முன்வைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் அன் ஆகியோருக்கு இடையில் முன்னர் இடம்பெற்ற இரண்டு சந்திப்புக்களும் இணக்கப்பாடின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்