CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

அனைவரும் தாய்நாட்டிற்கான பொறுப்பை  நிறைவேற்றுவதற்கு உறுதிபூண வேண்டும்

அனைவரும் தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண வேண்டும்

அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை  நிறைவேற்றுவதற்கு இந்த புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

அனைத்து இலங்கையர்களும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சித்திரைப் புதுவருட பாரம்பரிய நிகழ்வின்போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

 

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினார்கள்.

 

பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் பிரகாரம், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

மலர்ந்திருக்கும் சிங்கள - தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதியின் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள  உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

 

மரக் கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இம்முறை தமிழ் - சிங்கள புதுவருட பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் சுபவேளையும் அமைந்துள்ளது.

 

இதன் பிரகாரம், மர நடுகைக்காக இன்றைய தினம்  முற்பகல் 11.17 க்கு கிழக்குத் திசையை நோக்கி மரக் கன்றொன்றை நடுவது சிறந்ததாகும்.

 

இந்த சுபநேரத்தில் மரக் கன்றொன்றை நட்டு, எதிர்கால தலைமுறைக்கும், சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தங்களின் பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்